தன் அமைச்சனை அழைத்த அரசன் ஒருவன் , ' ' எனக்கோ அறுபது வயது ஆகிறது . முதுமைப் பருவத்தில் உள்ளேன் . படிக்க வேண்டும் என்ற எண்ணம் என்னுள் எழுகிறது . இந்தப் பருவத்தில் என்னால் படிக்க இயலுமா ? அதனால் பயன் உண்டா ? ' ' என்று கேட்டான் .
அறிவு நிறைந்த அந்த அமைச்சன் , ' ' அரசே ! படிப்பதற்கு முதுமை தடை ஆகாது . எப்பொழுது வேண்டுமானாலும் நாம் விளக்கு ஏற்றலாம் ' ' என்றான் '
நீ சொல்வது எனக்கு விளங்க வில்லையே ' ' என்று கேட்டான் அரசன் .
' ' அரசே ! ஒருவன் எப்பொழுதும் படிக்கலாம் .
இளமையில் படிப்பது காலைக் கதிரவனின் ஒளி போன்றது . அவன் எதிர்காலம் நன்றாக அமையும் .
நடுத்தர வயதில் படிப்பது நண்பகல் கதிரவன் ஒளி போன்றது . மீதி உள்ள காலத்திற்குப் பயன்படும் .
முதுமையில் படிப்பது விளக்கு ஏற்றுவது போன்றது . ஏராளமான ஒளி தரா விட்டாலும் தன்னால் இயன்ற இருளை ஓட்டும் . அதனால் எப்பொழுதும் படிக்கலாம் . அதற்கு ஏற்ற பயன் உண்டு ' ' என்று விளக்கினான் அமைச்சன் .

No comments:
Post a Comment