Sunday, May 3, 2020

மகிழ்ச்சியாய் வாழ !

 அணில் ஒன்று மரக் கிளைகளில் தாவி விளையாடிக் கொண்டிருந்தது . அந்த மரத்தின் கீழே தூங்கிக் கொண்டிருந்த ஓநாயின் மேல் அது தவறி விழுந்தது. 

விழித்த ஓநாய் அந்த அணிலைப் பிடித்துக் கொண்டது. உயிர் போகப் போகிறதே என்று அஞ்சியது அணில்.

''என்னை விட்டுவிடு" என்று கெஞ்சியது .

“ நான் கேட்கும் கேள்விக்கு நீ சரியான பதில் தந்தால் உன்னை விட்டுவிடுகிறேன் '' என்றது ஓநாய். 

“கேள் . எனக்குத் தெரிந்தால் பதில் சொல்கிறேன் '' என்று நடுக்கத்துடன் சொன்னது அணில்.

 "அணிலே ! நீங்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் . மரக் கிளைகளில் ஓடி ஆடி விளையாடுகிறீர்கள் . உங்களை விட மிகுந்த வலிமை வாய்ந்தவர்கள் ஓநாய்களாகிய நாங்கள் . இருந்தும் நாங்கள் எப்பொழுதும் சோகத்துடன் இருக்கிறோம் . அது ஏன் ? " என்று கேட்டது ஓநாய். 

' 'ஓநாயே ! என்னை மரத்தின் மேல் ஏற அனுமதி . கிளையில் அமர்ந்து பதில் சொல்கிறேன் " என்றது அணில், 

"அப்படியே செய் '' என்று அணிலை விட்டது ஓநாய்.


 மரத்தின் கிளையில் பாதுகாப்பாக அமர்ந்தது அணில் . ''ஓநாய்களாகிய நீங்கள் கொடியவர்கள் . நீங்கள் செய்யும் கொடுமைகளுக்கு அளவே இல்லை . அந்தக் கொடுமைகள் உங்கள் உள்ளத்தை எப்பொழுதும் எரித்துக் கொண்டே இருக்கின்றன . அதனால்தான் எப்பொழுதும் சோகமாக இருக்கிறீர்கள் . 

அணில்களாகிய நாங்கள் எந்த உயிருக்கும் தீங்கு செய்வதே இல்லை . அதனால் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கிறோம் '' என்றது.

No comments:

Post a Comment

உவந்து அளிப்பதே உயர்ந்தது

முன்னொரு காலத்தில் புகழ் பெற்ற இசுலாமியத் துறவியாக ஜலால் என்பவர் விளங்கினார் . அவருக்கு நிறைய சீடர்கள் இருந்தனர் . அரசர்கள் பலரும் அவரை வணங...