ஓர் ஊரில் முரட்டுச் சிறுவன் ஒருவன் இருந்தான் . அவனிடம் முன் கோபம் அதிகமாக இருந்தது . அவன் வெளியே சென்றால் போதும் யாருடனாவது சண்டை போடாமல் வீடு திரும்ப மாட்டான் .
ஒருநாள் அவனுடைய வீட்டிற்குப் பெரியவர் ஒருவர் வந்தார் . அவரிடம் அவன் பெற்றோர்கள் தங்கள் மகனின் முரட்டுத்தனத்தைப் பற்றிச் சொன்னார்கள் . அப்பொழுதுதான் அவனும் எவனுடனோ சண்டை போட்டுக் கிழிந்த சட்டையுடன் வீட்டிற்கு வந்தான் .
அவனை அன்புடன் அழைத்த பெரியவர் , ' ' நான் ஒரு கேள்வி கேட்கிறேன் , அதற்குப் பதில் சொல்கிறாயா ? ' ' என்று கேட்டார் .
“ சொல்கிறேன் ' ' என்றான் அவன் .
' ' உன்னைப் போல வலிமையான பையன் பிறர் கூறும் கேலிகளைப் பொறுத்துக் கொள்வானா ? அல்லது பதிலுக்குக் கிண்டல் செய்வானா ?
பிறர் தன்னை அடித்த உடன் மீண்டும் அவர்களை அடிப்பானா ? அல்லது அமைதியாக வந்து விடுவானா ? ' ' என்று கேட்டார் .
" இது என்ன கேள்வி ?
பிறர் ஒரு திட்டு திட்டினால் பதிலுக்குப் பத்துத் திட்டு திட்டுவான் .
ஒரு அடி அடித்தால் பத்து அடி அடிப்பான் . என்று கூறினான் அந்த சிறுவன்
" கேலிக்குக் கேலி பேசுவது . அடிக்குப் பதிலடி தருவது கடினமான செயலா ? அல்லது அந்தச் சூழலில் பொறுமையாக இருப்பது கடினமா ? ' ' என்று கேட்டார் அந்த பெரியவர்.
பொறுமையாக இருப்பதுதான் கடினமான செயல் ' ' என்று தயக்கத்துடன் சொன்னான் அவன் .
உன்னைப் போன்று வலிமை உடையவர்கள் கடினமான செயல்தானே செய்ய வேண்டும் . அப்பொழுதுதானே பெருமை பெற முடியும் .
இனி யாராவது உன்னை அடித்தாலோ கேலி செய்தாலோ பொறுமையைக் கடைப்பிடி " என்று அறிவுரை சொன்னார் அவர் .
சில மாதங்கள் கழித்து மீண்டும் அவர் அந்த வீட்டுக்கு வந்தார் . அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்றான் சிறுவன் .
“ ஐயா ! நீங்கள் சொன்னபடியே கடினமான செயல் செய்து வருகிறேன் . யார் என்னைக் கேலி செய்தாலும் அடித்தாலும் பொறுத்துக் கொள்கிறேன் . இப்பொழுது எல்லோரும் என்னைப் பாராட்டுகின்றனர் ' ' என்று பெருமையுடன் சொன்னான் .

No comments:
Post a Comment