Sunday, May 3, 2020

ஒன்றிலேயே கவனம் செலுத்து

முன்னொரு காலத்தில் சீன நாட்டில் புகழ் பெற்ற ஆசிரியர் ஒருவர் இருந்தார் . பல மாணவர்கள் அவரிடம் படித்து வந்தனர் .

ஒரு நாள் மாலை நேரம் , தன் மாணவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார் அவர் . அப்பொழுது பக்கத்து வீட்டுக்காரர் அங்கு வந்தார் .

“ உங்களுக்கு ஏதேனும் உதவி தேவையா ? ' ' என்று கேட்டார் ஆசிரியர் .

' ' மலையில் மேயச் சென்ற என் ஆடுகளில் ஒன்று திரும்பவில்லை . அதைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காக உங்கள் வேலையாட்களை அனுப்பி வைக்க வேண்டும் " என்றார் அவர் .

' ' உங்களிடமே இருபது வேலையாட்கள் இருக்கிறார்களே ! ஒரு ஆட்டைத் தேடுவதற்கு அவர்களால் முடியாதா ? என் வேலையாட்களையும் கேட்கிறீர்களே ? ' ' என்று வியப்புடன் கேட்டார் ஆசிரியர் . "

மலையில் நிறைய பாதைகள் உள்ளன . எந்தப் பாதை வழியாக வேண்டுமானாலும் அந்த ஆடு சென்று இருக்கலாம் . அதனால் எல்லாப் பாதைகளின் வழியாகவும் ஆட்களை அனுப்பினால்தான் ஆட்டைக் கண்டுபிடிக்க முடியும் " என்றார் அவர் .

தன் வேலையாட்களை அவருடன் அனுப்பி வைத்தார் ஆசிரியர் .

பிறகு மாணவர்களைப் பார்த்து அவர் , “ இந்த நகழ்ச்சி நமக்கு ஓர் உண்மையைக் கற்றுத் தருகிறது . பல பாதைகள் இருந்தால் ஒருவனால் என்ன முயன்றாலும் காணாமல் போன ஆட்டைக் கண்டுபிடிக்க முடியாது . அது போல ஒரு மாணவனுக்குப் பலவற்றில் ஆர்வம் இருக்குமானால் சிறந்த முறையில் அவனால் கல்வி கற்க முடியாது . எப்பொழுதும் ஒன்றிலேயே கவனமாக இருக்க வேண்டும் " என்றார்.

No comments:

Post a Comment

உவந்து அளிப்பதே உயர்ந்தது

முன்னொரு காலத்தில் புகழ் பெற்ற இசுலாமியத் துறவியாக ஜலால் என்பவர் விளங்கினார் . அவருக்கு நிறைய சீடர்கள் இருந்தனர் . அரசர்கள் பலரும் அவரை வணங...