முன்னொரு காலத்தில் அரசன் ஒருவன் அரியணையில் வீற்றிருந்தான்.
அங்கு துறவி ஒருவர் வந்தார் . அரசனிடம் சிறு கிண்ணம் ஒன்றைத் தந்தார். ' ' அரசே ! இதற்குள் அமுதம் உள்ளது . ஒருவர் மட்டுமே உண்ணலாம். உங்களுக்காக அரும்பாடுபட்டுக் கொண்டு வந்தேன் . இதை நீங்கள் உண்டால் இறப்பின்றி நீண்ட காலம் வாழலாம் ' ' என்றார்.
அவையில் இருந்தவர்களைப் பார்த்தான் அரசன் . ' ' நான் இதை உண்ணலாமா ? ' ' என்று கேட்டான்.
' ' அரசே ! உடனே உண்ணுங்கள் . நீங்கள் நீண்ட காலம் உயிர் வாழ்வது நம் நாட்டுக்கும் மக்களுக்கும் மிகவும் நல்லது " என்று எல்லோரும் சொன்னார்கள்.
அவன் ஆசையாக வளர்த்து வந்த கிளி அப்பொழுது கத்தியது . “ கிளியே ! நான் இதைச் சாப்பிடலாமா ? வேண்டாமா ? ' ' என்று கேட்டான் அவன்.
' ' அரசே ! எனக்கு இந்த அமுதம் கிடைத்தால் நான் உண்ண மாட்டேன். எல்லோருக்கும் கிடைத்து எனக்கும் கிடைத்தால்தான் உண்ணுவேன். இல்லாவிட்டால் நம்முடன் பழகியவர்கள் எல்லாம் இறந்து கொண்டே இருப்பார்கள் . அவர்கள் இறப்பதைப் பார்த்து வருந்திக் கொண்டே நாம் மட்டும் உயிருடன் இருக்க வேண்டும் . அந்த வாழ்க்கை எனக்கு வேண்டாம் ' ' என்றது கிளி.
அதன் சொற்களில் உள்ள உண்மையை அறிந்தான் அரசன் . தனக்குக் கிடைத்த அமுதத்தை வேண்டாம் என்று மறுத்து விட்டான்.

No comments:
Post a Comment